கோவில் வளாகத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் இருக்கும் சந்தன கருப்பசாமி கோவில் வளாகத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அருணாச்சலம் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பூசாரிகள் பேரவை அமைப்பாளர் ஜெயராமன், முருகேசன், பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், மாவட்ட அமைப்பாளர் சாமி போன்றோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பூசாரிகளின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கிராம கோவில் பூசாரிகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து பேரவை நிர்வாகி வீரக்குமார் என்பவர் நன்றியுரை கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.