Categories
மாநில செய்திகள்

“திமுக அரசுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை”…. EPS அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமான அமைப்பாகத்தான் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் செவிலியர் இல்லாமல் செயல்படாமலேயே இருந்தது என விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்குகள் அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு கண்டனத்துக்குரியது. ஏழை,எளிய மக்களுக்காகவும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. ஏழை,எளிய மக்களின் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |