கொரோனா மருத்துவ காப்பீட்டு பாலிசிகள் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படும் செலவினங்களையும் உள்ளடக்கும் என இந்திய காப்பீடு ஒழுங்காற்று ஆணையம் கூறியுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கான செலவுகளை உள்ளடக்கிய காப்பீடு திட்டம் மற்றும் பொது சுகாதார நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு திட்டங்கள் அனைத்தும் ஒமைக்ரான் தொற்றால் ஏற்படும் செலவினங்களையும் உள்ளடக்கும் எனக் கூறியுள்ளது. இதற்கு பாலிசி ஒப்பந்தங்களில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன என ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது.