திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான 3402 ஏக்கர் நிலம் குறித்த வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலுக்கே நிலம் சொந்தம் என தீர்ப்பு கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான சுமார் 3402 ஏக்கர் நிலம் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், வேத பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், பத்மாவதி விருந்தினர் மாளிகை, தேவஸ்தான செயல் அலுவலர், இணை செயல் அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தது. இந்த நிலங்கள் அனைத்தும் கோவிலுக்கே சொந்தம் என திருப்பதி கங்காராம் மடத்தின் மடாதிபதியாக இருந்த ஓம்கார் தாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 1998-ஆம் ஆண்டு தொடங்கி இனாம் துணை தாசில்தார் நீதிமன்றத்தில் 23 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்குக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி
உரிமை பத்திரம் 2539 ன் படி கங்கா ராம் மடம் தொடர்ந்த வழக்கில் தொடர்புடைய சொத்துக்கள் அனைத்தும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தான் சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.