உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் 2022 ஆம் ஆண்டின் முதல் தீர்மானத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் 2022 ஆம் ஆண்டின் முதல் தீர்மானத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியினை செலுத்துவதே தன்னுடைய நடப்பாண்டின் முதல் தீர்மானம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொரு நாட்டினுடைய அரசாங்கம் உட்பட அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் தான் மேற்குறிப்பிட்டுள்ள தீர்மானத்தினை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி 70% பேருக்கு கொரோனா தடுப்பூசியினை செலுத்துவது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற காலம் கடந்து விட்டதால் உடனே தொடங்க வேண்டும் என்றும் கூறிய டெட்ரோஸ் உலக நாடுகளுக்கு இது தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளார்.