Categories
மாநில செய்திகள்

ஆச்சரியம்! மரத்தில் தொங்கியபடி…. ஸ்டாலின் உருவத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்…. கோரிக்கை….!!!!

தமிழகத்தில் சுமார் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு வடிவங்களில் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். அதில் செல்வம் என்பவர் உடல் முழுவதும் பெயின்ட் ஊற்றிக்கொண்டு தரையில் படுத்து உருண்டு ஏற்கனவே மு.க ஸ்டாலின் உருவத்தை வரைந்தார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையை சேர்ந்தவர் பகுதி நேர ஓவிய ஆசிரியர் செல்வம். இவர் சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் அரசாணை வெளியிட வேண்டி மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டு முக.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் படத்தையும் 30 நிமிடங்களில் வரைந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

Categories

Tech |