கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17,200 பேரிடம் தென்ஆப்பிரிக்கா நடத்திய ஆய்வின் மூலம் ஓமிக்ரான் தொற்று வீரியத்தை இழந்ததை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தென்னாப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17,200 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் ஓமிக்ரான் அதனுடைய வீரியத்தை இழந்தது கண்டறியப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை, இறப்பு விகிதம் மற்றும் வெண்டிலேட்டரின் உதவிகள் போன்றவற்றை கணித்து தென்னாப்பிரிக்காவின் ஆய்வாளர்கள் அவ்வாறு கூறியுள்ளார்கள்.
ஏனெனில் தென்னாப்பிரிக்காவில் உச்சமாக 3-ஆவது அலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29% மாக இருந்துள்ளது. ஆனால் தற்போது ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சதவீதம் 3 ஆகவேவுள்ளது.
மேலும் தென்ஆப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சதவீதம் முதல் 3 அலையிலும் 68, 69, 69 என்ற கணக்கிலேயே இருந்துள்ளது.
ஆனால் தற்போது ஓமிக்ரானால் 41 சதவீதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகையினாலயே தென்னாபிரிக்காவின் ஆய்வாளர்கள் ஓமிக்ரான் வீரியத்தை இழந்து விட்டதாக கூறியுள்ளார்கள்.