நடிகர் வடிவேலு பல வருடங்களுக்கு பின்பு மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் வடிவேலு மீதான பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாகப் பேசித் தீர்க்கப்பட்டு தற்போது அவர் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்க உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடல் கம்போஸிங்கிற்காக நடிகர் வடிவேலு டைரக்டர் மற்றும் பட குழுவினர் ஆகியோர் லண்டன் சென்றிருந்தனர். இந்நிலையில் லண்டன் சென்று திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
பரிசோதனை செய்ததில் நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு தற்போது நடிகர் வடிவேலு ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பினார். இதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் வடிவேலு மு.க. ஸ்டாலின் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், எதற்கும் பயப்பட வேண்டாம் எல்லாம் சரியாகிவிடும் என கூறியதாகவும் தெரிவித்தார் . இந்த வார்த்தைகள் தனக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தன எனக் கூறினார்.