மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
ஜாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் குறித்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடபட்டது. மேலும் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மாணவர்களாக சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு போராடுவது அர்த்தமற்றது . இந்த மனநிலையில் நாம் எதையும் தீர்மானிக்க முடியாது என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக போராடினார்களா? அல்லது கலவரம் செய்தார்களா? என்பதை குறித்து எங்களால் இப்போது கூற முடியாது. என்றும் வன்முயைான போராட்டங்களை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.
“நாடு முழுவதும் தொடரும் வன்முறை குறித்துதான் நாங்கள் விசாரிக்க கோருகிறோம். இவ்வகையான வன்முறையை சம்பவங்களை உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டும். இது ஒரு கடுமையான மனித உரிமை மீறல் என்று “வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் “கூறினார்.
மேலும் கைது செய்யப்பட்டு மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டதனர்.