ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கொரோனா பரவல் தவிர மற்றுமொரு காரணத்தையும் படக்குழு கூறியுள்ளது.
தெலுங்கில் ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜனவரி ஏழாம் தேதி வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு கொரோனா பரவல் மட்டும் காரணம் என கருதப்பட்டு வந்தது. ஆனால் இது தவிர மற்றுமொரு காரணமும் உள்ளது. அது என்னவென்றால் தெலுங்கானாவில் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடும் பொழுது எதிர்பார்த்த லாபம் கிடைப்பது மிக கடினம்.
இதனை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை ராஜமவுலி சந்தித்து பெரிய பட்ஜெட் படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஜெகன்மோகன் ரெட்டி அதை ஏற்க மறுத்து கட்டணத்தை மேலும் குறைத்தார். எனவே இந்த குறைந்த கட்டணத்தில் படத்தை வெளியிடும் பட்சத்தில் போட்ட பணத்தை எடுப்பது மிக கடினம். ஆதலால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.