பிக்பாஸ் குரல் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியின் தற்போதைய சீசனின் டைட்டிலை யார் வெல்ல போகிறார் என்று மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸாக குரல் கொடுத்து வருபவர் யார் என்று தெரியவந்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CS4O_uXjkPS/