Categories
உலக செய்திகள்

ச்சீ, என்னது இது…? சாப்பாட்டில் இறந்த எலியின் கண்கள்… பதறிப்போன இளைஞர்….!!

ஸ்பெயின் நாட்டில் ஒரு இளைஞர் பல்பொருள் அங்காடியில் காய்கறிகள் வாங்கி, சமைத்து சாப்பிட்ட போது, அதில் எலியின் கண்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Juan Jose என்ற இளைஞர் தன் குடியிருப்பிற்கு அருகில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்கு காய்கறிகள் வாங்க சென்றிருக்கிறார். அங்கு காய்கறிகளை வாங்கி விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அதன்பின்பு, அந்த காய்கறிகளை வைத்து சமைத்து,  உணவைத் தட்டில் எடுத்துக் கொண்டு சாப்பிட அமரும் போது கருப்பு நிறத்தில் ஏதோ இருந்திருக்கிறது.

ஆனால், அதனை பார்க்காமல் சாப்பிட்டு விட்டார். அப்போது தான் ஏதோ வித்தியாசமான பொருள் வாய்க்குள் போனதை உணர்ந்திருக்கிறார். அதன்பிறகு தட்டில் கண்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். அதனை பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் காண்பித்த போது, அது இறந்த எலியின் கண்கள் என்று தெரியவந்திருக்கிறது.

அதாவது கடையில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளில் இறந்த எலி கிடந்திருக்கிறது. காய்கறியோடு கிடந்த எலியின் கண்களை பார்க்காமல், அதனை சமைத்து விட்டார். தற்போது அந்த பல்பொருள் அங்காடி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருக்கிறார். மேலும், தன்  சாப்பாட்டில் எலியின் கண்கள் கிடக்கும் புகைப்படத்தை இணையதளத்தில்  வெளியிட்டிருக்கிறார்.

Categories

Tech |