Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷாலுக்கு ரூ 500 அபராதம் …. எச்சரிக்கை விடுத்த நீதிபதி ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷாலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் ரூபாய் 1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என அவர் மீது ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது .அதேசமயம்  பட தயாரிப்பாளராகவும் உள்ள விஷாலின் தயாரிப்பு நிறுவனம் மீதான சேவை வரி  விவகாரத்திலேயே இந்த புகார் கூறப்பட்டிருந்தது .அதேசமயம் நடிகர் விஷாலுக்கு எதிராக பலமுறை சேவை வரி துறையின் சென்னை மண்டல அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பி உள்ளனர்.இதில் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை சுமார் 10 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது . ஆனால் விஷால் நேரில் ஆஜராகி அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருந்துள்ளார் .

இதனால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி சரக்கு மற்றும் சேவை வரி துறை அதிகாரிகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறும்போது , ‘அதிகாரிகள் 10 முறை சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் வேண்டுமென்றே ஆஜராகாமல் விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது. அவர் மீதான குற்றச்சாட்டின் தன்மை குறைவாக இருப்பதால் அவருக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படுகிறது ‘இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |