திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலரான விஜயகுமார் தன் மனைவி பிரியதர்சினியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர்களின் 6 மாத பெண் குழந்தைக்கு தாய் பிரியதர்சினி பால் ஊட்டும் போது, குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பெற்றோர் குழந்தையை மீட்டு சென்னை எழும்பூரிலுள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் நுரையீரலில் தாய்பால் ஒன்று சேர்ந்து கட்டியிருந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.