வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக பெரும்பாலனவர்கள் ஏடிஎம் மையங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலமாக எந்த ஏடிஎம் மையங்களில் வேண்டுமானாலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மேலும் வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் மாதத்திற்கு இவ்வளவு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம் கார்டு பயன்படுத்தினால் ரூ.20 இருந்து ரூ.21 ஆக கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏடிஎம் இயந்திரங்களில் பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக எஸ்பிஐ இயந்திரங்களில் பணம் எடுக்கும்போது ஒடிபி எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டை தொலைக்க நேரிட்டால் அதனை வைத்து மோசடி கும்பல் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர். இது போன்ற முறைகேடுகளை தடுப்பதற்காக எஸ்பிஐ வங்கி OTP முறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம் களில் இருந்து ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை எடுக்கும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். அந்த 4 இலக்கு OTP உள்ளிட்ட பிறகுதான் தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.