மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளும் நடிகர்களுக்கு இணையாக சோலோ ஹீரோயின் பாணியில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முக்கியமானவர் என்றால் நயன்தாரா இவர் நடிக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்று வருகின்றனர். இவரை அடுத்து இதுபோன்ற திரைப்படங்களை விரும்புபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த காக்கா முட்டை, கனா போன்ற திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இதேபோல் மலையாளத்தில் ஜியோபேபி இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஏ தி கிரேட் இந்தியன் கிச்சன். ஆணாதிக்க சமூகத்தால் அழுத்தப்பட்ட ஒரு படித்த பெண்ணின் வாழ்க்கை கதையை யதார்த்தமாக கூறுகிறது இந்த திரைப்படம்.
இந்த திரைப் படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர். கண்ணன் இயக்குகிறார் மற்றும் துர்க்கா சவுத்ரி, நீல் சவுத்ரி ஆகியோர் தயாரிக்க உள்ளனர் . முந்தைய திரைப்படங்கள் போலவே இந்த திரைப்படமும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அர்ஜுன் ரெட்டி போன்ற சில ரீமேக் திரைப்படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.