Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு முடிவு கட்டுமா ஒமைக்ரான்?…. நிபுணர்கள் வெளியிட்ட அதிரடி கருத்து….!!!!

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும், வேகமாக பரவும் தன்மை கொண்ட உறுமாறிய கொரோனாவாக இருப்பதால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் பரிசோதனைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ஒமைக்ரான் வைரஸ் இயற்கையான தடுப்பூசியாக செயல்படும். இது கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர உதவும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதுபற்றி நிபுணர்கள் என்ன சொல்கின்றார்கள்
என்று பார்க்கலாம்.

சாகீத் ஜமீல் (பிரபல நச்சுயிரியல் நிபுணர்) கூறியதாவது, ஒமைக்ரான் இயற்கையான தடுப்பூசி என பொறுப்பற்றவர்கள் தான் ஆபத்தான யோசனைகளை பரப்புகிறார்கள்.
இது மனநிறைவை வளர்கிறது. இந்த நேரத்தில் கிடைத்த ஆதாரங்களை விட, தொற்றுநோய் சோர்வு மற்றும் அதிகமாக செயல்படவிடாமைக்கு வேரூன்ற வைத்துவிடும். இந்தியாவை எடுத்துக் கொண்டால் இங்கு ஊட்டச்சத்து குறைபாடு, காற்றுமாசு, நீரிழிவு நோய் அதிகமாக உள்ள நிலையில் ஒரு வைரஸால் மக்களை மன நிறைவு அடைந்து வெளிப்படுத்த அனுமதிப்பது நல்லதோர் அறிவியலும் அல்ல, பொது சுகாதாரமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

யாஷ் ஜாவேரி (அவசரகால மருத்துவ நிபுணர்) ஒமைக்ரானின் அதிக பரவும் தன்மை, லேசான பாதிப்பு, பெருந்தொற்றை நிறுத்த உதவலாம். அதன் விளைவாக ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படலாம். ஒமைக்ரான் மந்தை எதிர்ப்பு சக்தியை பெருக்கலாம். இதனால் தொற்று நோய் பரவல் நிற்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்க்கவா, தடுப்பூசி மற்றும் இயற்கை நோய்த் தொற்றின் விளைவாக உருவான கலப்பு நோய் எதிர்ப்பு சக்தி கொரோனா மற்றும் அதன் திரிபுகளுக்கு எதிராக வலுவான பதிலளிப்பாக மாறும் என கூறியது நினைவிருக்கலாம்.

Categories

Tech |