Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு அமல்…. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடல்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேர்  ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஒமைக்ரான் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. ஹரியானாவின் குருகிராம், பரிதாபாத் அம்பாலா, பஞ்ச்குலா மற்றும் சோனிபட் ஆகிய 5 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாவட்டங்களில் இரவு 11 மணி முதல் 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் செயல்பட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர் மற்றும் மல்ட்டிபிளக்ஸ்கள் இயங்க தடை அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் 50% ஊழியர்கள் பணி புரிய வேண்டும். மேலும் உணவுகளில் 50% வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும். இறப்பு நிகழ்வில் 50 பேர் மற்றும் திருமண நிகழ்வில் 100 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |