Categories
உலக செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்…! அடுத்த ஒரு வாரத்தில்…. பாதியளவு மக்கள் “இந்த வைரஸால்” தாக்கப்படுவார்கள்…. ஷாக் கொடுத்த நிபுணர்….!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா பணிக்குழுவின் நிபுணர் ஒருவர் அந்நாட்டிற்கு ஓமிக்ரான் தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கடந்த வியாழக்கிழமை மட்டும் 19,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் கொரோனா பணிக்குழு நிபுணரான ரிசார்ட் ஓமிக்ரான் தொடர்பான முக்கிய எச்சரிக்கை ஒன்றை அந்நாட்டிற்கு விடுத்துள்ளார்.

அதாவது கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் சுவிட்சர்லாந்தில் தற்போது பரவிவரும் வேகத்தையே தொடர்ந்தால் ஜனவரி மாதத்தில் அந்நாட்டில் நாளொன்றுக்கு 30,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஓமிக்ரானின் வேகம் இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஒரு வாரத்தில் ஸ்விஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதியளவு கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த ஓமிக்ரான் மாறுபாட்டை கட்டுப்படுத்த முதன்மையான வழி பொதுமக்களை கூட விடாமல் தடுப்பதே என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |