செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்த அரசியல் நிலைப்பாடு, தமிழ் நாட்டின் எதிர்காலத்திற்க்காக, இந்துத்துவ சனாதன சக்திகளினுடைய சதிவேலைகளை அறுத்து எறிவதற்காக, திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் லட்சியங்கலான, சமூக நீதி, தமிழ்நாடு, தமிழர் தமிழ்நாட்டின் முன்னேற்றம் மாநில சுயாட்சி போன்றவற்றை நிலைநிறுத்துவதற்காக மேற்கண்ட முடிவு சரியானது என்பதை தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்ற தேர்தலில் அங்கீகரித்துள்ளனர்.
மோடியை வெண்கல மனிதர், இரும்பு மனிதர், கரும்பு மனிதர் என்று சொல்வதெல்லாம் அவங்க வந்து வேற வழியில்லாமல், மத்திய அரசுக்கு காலடியில் கப்பம் கட்ட வேண்டிய நிலைமையில் இருந்தார்கள். அவர்கள் பயந்து போய் இருந்தார்கள். அதனால் மத்திய அரசாங்கத்தை அவர்கள் பாராட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்.
ராஜேந்திர பாலாஜியா…. அதிகமாக அடிபடுகின்ற பெயர் அந்தப் பெயர்தான் இப்போ. அவரைப் பற்றி மற்றவர்கள் வேற மாதிரி சொல்றாங்க. அவங்க கட்சிக்குள்ளேயே ஒரே கருத்து சொல்வது இல்லையே, தமிழ்நாடு போலீஸ் வந்து ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரானது என்று பெயர் உண்டு. ஆனால் 7 படை, ஒன்பது படை அமைத்தும் இன்னும்கூட அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அது காவல் துறைக்குப் பெருமை அளிப்பது அல்ல என தெரிவித்தார்.