Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு….. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை களையும் விதமாக இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக தன்னார்வலர்கள் மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று பாடம் நடத்துவார்கள். இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று காரணமாக இன்று முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதால் இல்லம் தேடி கல்வி திட்டம் வழக்கம்போல தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |