திமுக இரட்டை வேடம் போடுவதை வாடிக்கையாக வைத்து வருவதாக கடம்பூர் ராஜு ஆவேசமாக பேசியுள்ளார்.
கோவில்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் நடந்து வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக பற்றி விமர்சித்து பேசியுள்ளார். அதாவது திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தால் அவரை விமர்சித்து பேசுவது தான் வழக்கம்.
ஆனால் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும்போது திமுக கட்சி அதே பிரதமருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கிறது. அதாவது ஆளுங்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைபாடு இதுதான் திமுகவின் இரட்டை வேடம் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.