Categories
அரசியல் மாநில செய்திகள்

8மாசம் ஆகிட்டு..! ஸ்டாலின் வீடுவீடா போறாரு… இதெல்லாம் சரியில்லை, தப்பு … விளாசிய பிரேமலதா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலின் எத்தனை நாட்களுக்கு அவர்களையே குறை சொல்லி கொண்டே இருப்பார் என தெரியவில்லை. ஏனென்றால் எட்டு மாதம் ஆகிவிட்டது, ஆறு மாதம் டைம் கொடுக்க வேண்டும் என்று…..  இப்போது எட்டு மாதம் ஆகிவிட்டது. இனி ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஆட்சி செய்தவர்கள் மேல் குறை சொல்லாமல், அடுத்தடுத்து மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை நிச்சயமாக அவர் வந்து இறங்கிவந்து செய்ய வேண்டும்.

ஏனென்றால் திருவெற்றியூர் நான் நேரடியாக போனேன் , அங்க வந்து முதல்வர் வந்து சந்திக்க வில்லை என்று அத்தனை மக்களும் என்னிடம் வந்து குறை கூறினார்கள். எம்.எல்.ஏக்கள்,  மந்திரிகளை அனுப்புகிறார்களே ஒழிய முதல்வர் எங்கெங்கோ போகிறார் எங்களை வந்து நேரடியாக சந்தித்து எங்களுடைய துயரில் பங்கேற்கவில்லை என்று ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் திருவிக நகரில் அவர்கள் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்க மட்டும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் பார்ம் வந்து முதலமைச்சர் நேரில் சென்று கொடுப்பது ஒரு தவறான முன் உதாரணம் என்பதை இந்த பிரஸ்மீட் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் முதலமைச்சர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர், ஓட்டு போட்டவர்கள், ஓட்டு போடாதவர்கள் அத்தனை பேருக்கும் பொதுவானவர்.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு தலைப்பட்சமாக அவர் சார்ந்த ஒரு கட்சிக்கு உறுப்பினர் பார்மை வீடு வீடாக சென்று கொடுப்பது உண்மையிலேயே மிக மிக வேதனையான ஒரு விஷயம், கண்டிக்கத்தக்க விஷயம், கேப்டனும் அறிக்கை கொடுத்திருக்கிறார். எவ்வளவோ அவர்கள் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருக்காங்க, மந்திரிகள் எம்எல்ஏக்கள் நிறைய பேர் இருக்காங்க அவர்கள் எல்லாம் போகலாம்.

ஆனால் முதலமைச்சர் என்பவர் உறுதிமொழி ஏற்கும்போது என்ன சொல்கிறார் “அனைவருக்கும் நாம் பொதுவாக இருப்பேன்” என்று சொல்லி தான் உறுதிமொழி எடுக்கிறார்கள், அப்படி இருக்கும் பட்சத்தில் உறுப்பினர் பார்மை வீடு வீடாகச் சென்று அங்கே டேபிள் சேர் போட்டு உட்கார்ந்து முதலமைச்சர் செய்தது மிக தவறாக முன் உதாரணம், இது நிச்சயமாக கண்டிக்கத்தக்க விஷயம் என்பதை இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்.

Categories

Tech |