தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வுகள் முடிந்த பிறகு கடந்த டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஜனவரி 3 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாதுகாப்பு தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளிகள் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தொற்று அதிகரித்து வருவதால் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வருகை புரிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.