மத்திய பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் பன்னா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பயணிகள் மெதுவாக பேருந்தை செல்ல கூறியும் ஓட்டுனர் ஷம்சுதீன் அதனை பொருட்படுத்தாமல் வேகமாக சென்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பேருந்தின் அவசரகால வழியை அடைத்து கூடுதல் இருக்கைகள் அமைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுனர் ஷம்சுதீனுக்கு 19 குற்றப் பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் வீதம்190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமையாளர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விபத்தில் சிக்கிய ஓட்டுனருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது இதுவே முதல் முறையாகும்.