Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடையை மீறி நீராடிய பக்தர்கள்…. போலீஸ் தீவிர கண்காணிப்பு…. ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாவினர்….!!

புத்தாண்டை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் தடையை மீறி புனித நீராடியுள்ளனர்.

புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்கு தடை விதித்துள்ளனர். இருப்பினும் பக்தர்கள் தடையை மீறி அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி உள்ளனர்.

இதேபோல் தனுஷ்கோடி கம்பிபாடு, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்ட காவல்துறையினர் புதுரோடு பகுதியில் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனுஷ்கோடிக்கு சென்ற சுற்றுலா வாகனங்களையும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

Categories

Tech |