Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா பார்க்கத்தான் வந்தாரு …! ரொம்ப பலமா இருக்கோம்… உறுதியாக நம்பும் பிரேமலதா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ? நீட் தேர்வை முழுமையாக எடுப்போம் என்று கூறி தான் ஆட்சிக்கு வந்தார்கள், எல்லாருக்கும் நகை கடன் தள்ளுபடி என்று கூறித்தான் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு வரைக்கும் அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிக;ளையும் நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் இன்னும் மிகப்பெரிய மனக்குறை இருக்கு.

ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நீட் தேர்வில் தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களில் எத்தனையோ பேருக்கு அப்போ மட்டும் அவங்கள போய் நேராக சந்தித்து, அனுதாபம் தெரிவித்து இருக்கிறார்கள். இப்ப ஆட்சிக்கு வந்த பிறகும் தற்கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதே கேள்வி ? மத்திய அரசிடம் எம்.பிக்கள் எல்லாரும் சத்திக்க போறாங்க, ஆனா அவர்களுக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கவில்லை என்ற செய்தியையும் நாம் பார்க்கிறோம்.

அதனால் ஸ்ட்ராங்கா எதிர்த்தால் ஒட்டுமொத்த அனைத்து கட்சியையும் அழைத்துக்கொண்டு போய் தமிழகம் சார்பாக திமுக அரசு ஸ்ட்ராங்கா பதிவு பண்ணுங்க. எங்களுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை என்பதை உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நகை கடன் தள்ளுபடி வாக்குறுதிப்படி, அனைவருக்கும் நகை தள்ளுபடி செய்து கொடுக்க வேண்டும் என்பதை தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தேமுதிக கட்சி பலவீனமா இருக்கு, தேர்தலில் போட்டியிடவே நிர்வாகிகள் தயங்குகின்றார்கள் என கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், பார்த்தீர்களா ? இன்றைக்கு தலைவர் சும்மா பார்க்க மட்டும் தான் வந்தார். கேள்வி கேட்பவர்கள் தான் பலவீனமாக இருக்கிறார்கள், எங்கள் கட்சி எப்போதுமே பலவீனமாக இல்லை. அது பார்க்கிறவர்கள் கண்ணோட்டத்தை பொறுத்தது.

தேமுதிக என்றும் பலம் வாய்ந்ததாக தான் இருக்கிறது இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஏனென்றால் இது உள்ளாட்சித் தேர்தல், ஆளும் கட்சி…. ஏற்கனவே 10 வருடம் ஆட்சியில் இருந்தவர்களே இன்று போட்டியிட தயங்குகிறார்கள். இங்கு ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் தான் தேர்தல் என்று கொண்டு வந்து விட்டார்கள். அப்படி இருக்கும்போது பல சவால்களை எதிர்த்து தான் நாங்கள் களத்தில் இருக்கிறோம், நிற்போம் அதை எதிர்த்து ஜெயிப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Categories

Tech |