Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!”….18 பேரை கடித்த ஆக்ரோஷமான அணில்…. கருணை கொலை செய்த அரசு….!!

பிரிட்டனில் ஒரு அணில் 18 நபர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரிட்டனிலுள்ள பிளின்ட்ஷயரில் இருக்கும் பக்லி என்ற பகுதியில் ஒரு அணில், இரண்டு நாட்களில் சுமார் 18 பேரை கடித்திருக்கிறது. மேலும் அப்பகுதி மக்கள், அந்த அணிலுக்கு ‘ஸ்ட்ரைப்’ என்று பெயரிட்டுள்ளனர். இதுபற்றி, ஒரு நபர் கூறுகையில், ஸ்ட்ரைப், “என் தோட்டத்திற்கு வந்து தானியங்களை தின்று செல்லும். அது எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தான் இருந்தது.

ஆனால், திடீரென்று ஒரு நாள் என்னை கடித்து விட்டது. அதில் எனக்கு ரத்தம் வழிந்தது” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு நபர் தெரிவித்துள்ளதாவது, “இந்த, ஸ்ட்ரைப், என்னை கடித்து விட்டு என் நண்பர்களையும் கடித்தது. மேலும் பலரை கடித்திருக்கிறது. எனக்கு வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு பயமாக இருக்கிறது. ஸ்ட்ரைப், என்னை தாக்கியதை புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

ஸ்ட்ரைப்-ஆல் 18 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வழியாக அந்த அணிலை கால்நடை மருத்துவர் பிடித்தார். அதனை, வனப்பகுதியில் விடுவது சட்டப்படி குற்றமாகும். எனவே, ஸ்ட்ரைப்-ஐ கருணை கொலை செய்துள்ளனர். அந்நாட்டின் பூச்சிக் கட்டுப்பாட்டு சங்கம்,  சாம்பல் நிற அணில்கள் ஆக்ரோஷமானவை என்று கூறியிருக்கிறது.

Categories

Tech |