Categories
மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 139 காவல்துறையினர் மரணம்…. டிஜிபி சைலேந்திரபாபு…!!!!

தமிழக காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திர பாபு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், 2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறையானது துணிச்சலுடன் எதிர்கொண்டது. காவல்துறையின் கண்ணியம் குறையாது ஒவ்வொருவரும் செயல்புரிய வேண்டும். இதனையடுத்து இதயத்தில் எந்த கெடுதலும் இன்றி நமது திறமையாலும், அறிவினாலும் போரிடுவோம்.
தமிழகம் முழுவதிலும் 2021-ல் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையில் தமிழகத்தில்  கொரோனாவுக்கு எதிராக போர் செய்ததில் 139 காவல்துறையினரை இழந்துள்ளோம். ஆகவே தமிழக காவல்துறையின் கண்ணியம் குறையும் வகையில் அதிகாரிகள் செயல்படக்கூடாது. அதன்பின் காவல்துறையின் ஆண், பெண் அதிகாரிகளின் அர்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண் போல் நின்றால் சாத்தியமானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |