உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா நடப்பாண்டில் ஒழியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் உலகளவில் கிட்டத்தட்ட 5.5 மில்லியன் மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
மேலும் உலகளவில் சுமார் 287 மில்லியன் நபர்கள் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டாக்டர் டெட்ரோஸ் அதோனோம் நடப்பாண்டில் கொரோனா வைரஸ் ஒழியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஒன்றன்பின் ஒன்றாக கொரோனா வைரஸ் உரு மாறுவதற்கான முக்கிய காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது உலக நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதில் ஏற்படும் சமத்துவமின்மையாலயே கொரோனா வைரஸ் உரு மாறுகிறது என்று தெரிவித்துள்ளார்.