Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட்டால் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி?…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டில்  மாடு பிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் எதிரொலியாக நேற்று முன்தினம் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலக்காடு, அலங்காநல்லூரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தாலும் ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த மதுரை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதே சமயம் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காண வரும் பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும் என்று பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கிய தமிழக அரசு கட்டுப்பாடுகளை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |