தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்பின் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பும் மீண்டும் அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
சென்னையில் 589 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 682 ஆகவும், செங்கல்பட்டில் 137-ல் இருந்து 168 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் கோவையில் 70-ல் இருந்து 75 ஆகவும் அதிகரித்துள்ளது. திருவள்ளூர்- 70, திருப்பூர்- 44, வேலூர்- 39, தூத்துக்குடி- 36, காஞ்சி மற்றும் ஈரோடு- 35, சேலம்-30 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அதிகரித்துள்ள 3 மாவட்டங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்கும் எனக் கூறப்படுகிறது.