உத்தரப்பிரதேசத்தில் இந்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு விவசாய பாசனத்திற்கு தேவையான மின்சாரமும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
மேலும் பஞ்சாப் மற்றும் கோவா மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் அதேபோன்றே வாக்குறுதி அளித்துள்ளார்.