Categories
தேசிய செய்திகள்

2021 ஆம் ஆண்டில் 145 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி சாதனை…. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகவும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் 145 கோடி டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நாட்டில் 90% பேர் முதல் டோஸ் மற்றும் 60% பேர் 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் வருகின்ற ஜூன் 3-ம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது இன்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |