பெங்களூருவில் நவீன் குமார் -அர்ச்சனா ரெட்டி தம்பதியினர் வசித்துவந்தனர். இவர்களுக்கு யுவிகா எனும் 1 குழந்தை உள்ளது. இந்த நிலையில் அர்ச்சனா – அரவிந்த் இவர்களுக்கு இடையே ஒத்துப் போகாததால் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் அர்ச்சனா நவீன்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு தன் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி பரப்பன அக்ரஹாரா அருகே ரோட்டில் வைத்து அர்ச்சனா ரெட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக அர்ச்சனா ரெட்டியின் மகள் தனது 2-வது கணவர் நவீன்குமாருடன் உல்லாசமாக இருப்பதை அர்ச்சனா ரெட்டி பார்த்திருக்கிறார். இதையடுத்து நவீன்குமாரிடம் தனது மகளுடன் பழகுவதை நிறுத்தும்படி கண்டித்ததோடு மட்டுமல்லாமல் நவீன் குமாருக்கு குறிப்பிட்ட அளவு பணத்தை கொடுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேற்றிருக்கிறார். இதையடுத்து அர்ச்சனா ரெட்டியை கொலை செய்ய நவீன்குமார் திட்டமிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதன்படி அந்த மகள் அவரின் தாயின் 2-வது கணவருடன் சேர்ந்து கொண்டு கோடிக்கணக்கான சொத்துக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் இந்த கொலையை செய்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் அந்த மகள் மற்றும் மகன் நவீன் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.