சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆட்டோ டிரைவருக்கு நீதிமன்றம் 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ டிரைவரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வக்குமாரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த ஒரு பெண்ணை செல்வகுமார் 2-வதாக திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமிக்கு செல்வகுமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து அறிந்த செல்வக்குமாரின் 2-வது மனைவி அவர் மீது பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வகுமாரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் செல்வகுமாருக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.