ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக 5 மாவட்டங்களுக்கு தேர்தல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தலை நேர்மையான முறையில் நடத்தவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்க பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திற்கு தேர்தல் கண்காணிப்பாளாராக காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து, நாகப்பட்டின மாவட்டத்திற்கு ஞானசேகரனும், நாமக்கல் மாவட்டத்திற்கு ஜெகநாதனும், ராமநாதபுர மாவட்டத்திற்கு அதுல் ஆனந்தும், நீலகிரி மாவட்டத்திற்கு ஜோதி நிர்மலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.