ஓமிக்ரோன் எனப்படும் மாற்றமடைந்த கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வந்த கொரோனா வைரஸ் சற்றே குறைந்த நிலையில் தற்போது ஓமிக்ரோன் எனப்படும் புதிய வகைக் கொரோனா உருவெடுத்து தென் ஆப்பிரிக்கா தொடங்கி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கூட இந்த ஓமிக்ரோன் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவில் மட்டும் இருபத்தி ஏழாயிரம் பேர் ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அந்நாட்டில் முக கவசம் கட்டாயம் மற்றும் பொது இடங்களில் கூடுதலை தவிர்த்தல் போன்ற பல நடைமுறைகள் வழக்கத்தில் இருந்து வந்தன. ஆனால் திடீரென இந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு நேற்று ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை அந்நாட்டின் அதிபர் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார்.