Categories
மாநில செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. சம்பள உயர்வு பற்றிய சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் எஞ்சிய தொகையை நோய்த்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது தற்போது ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 3% உயர்த்தி அறிவித்துள்ளார்.

இந்த முடிவின் காரணமாக 7.5 லட்சம் ஒடிசா அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊதிய குழுவில் உள்ள ஊழியர்கள் நிலுவை தொகையில் 30% வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. ஜனவரி 2016 -முதல் ஆகஸ்ட்- 2017 வரை உயர்த்தப்பட்ட ஊதியத்தை 50% நிலுவைத் தொகையை பெற்று வந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 6 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள். இந்த உயர்வை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு இனி 1% பிஏ வழங்கப்படும். இந்த உயர்வு ஜூலை 1 2022 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |