Categories
சினிமா தமிழ் சினிமா

ரைட்டர் வெற்றியை தொடர்ந்து…. திறமையான இயக்குனருடன் இணைந்ததில் பெருமை…. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ ட்விட்…!!!

ரைட்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிராங்கிளின் ஜேக்கப் புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சமுத்திரக்கனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ரைட்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரைட்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் அடுத்ததாக லலித் குமாரின் செவன் க்ரீன் ஸ்டூடியோ பேனரின் கீழ் தயாரிக்கப்படும் புதிய படத்தினை இயக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் நீலம் புரோடக்ஷன் சார்பில் உருவான ரைட்டர் திரைப்படத்தை தொடர்ந்து திறமையான இயக்குனருடன் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |