Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்க இருந்து வந்தாங்கன்னு தெரியல…. மர்ம நபர்கள் கைவரிசை…. பெண் அளித்த புகார்….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களத்தை அடுத்துள்ள ஆட்டாங்குடி கிராமத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான விஜயா என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்தமர்ம நபர்கள்2 பேர் இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்து வந்தனர்.

இதனையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து விஜயா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா உடனடியாக ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |