2021-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் பெயர் பட்டியலை ஐசிசி பரிந்துரைத்து உள்ளது.
2021-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர்,வீராங்கனைகள் உள்ளடங்கிய பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டது .இதில் ஆண்கள் ஒருநாள் போட்டியில் வங்காளதேச வீரர் சாகிப் அல் ஹசன் , பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் , தென் ஆப்பிரிக்காவின் மலன் மற்றும் நெதர்லாந்து அணி வீரர் பால் ஸ்டிர்லிங் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது .
அதேபோல் ஆண்கள் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் ,பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் ,இலங்கை அணியில் ஹசரங்கா, மற்றும் ஆஸ்திரேலிய அணியில் மிட்சேல் மார்ஷ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இந்திய அணி வீரர் ஒருவர் கூட இடம் பிடிக்கவில்லை .இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.