Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் விலை தள்ளுபடி….. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

சலுகை விலையில் ஆவின்பால் வாங்குவதற்கு சூப்பர் ஐடியா ஒன்றை தமிழக அரசு கொடுத்துள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த 16.05.2021 முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பிற்கு பின்னர் ஆவின்பால் சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்தது. ஆவினின் அடையாளமாக பொதுமக்களுக்கு அதிகபட்ச விலையில் இருந்து, மேலும் குறைத்து சலுகை விலையில் பால் அட்டை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அதன்படி,

சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்) :

அதிகபட்ச விற்பனை விலை லிட்டருக்கு 40 ரூபாய்

பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு 37 ரூபாய்

நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை):

அதிகபட்ச விற்பனை விலை லிட்டருக்கு 44 ரூபாய்

பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு 42 ரூபாய்

நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு):

அதிகபட்ச விற்பனை விலை லிட்டருக்கு 48 ரூபாய்

பால் அட்டை விற்பனை விலை லிட்டருக்கு 46 ரூபாய்

தற்போது சென்னையில் மட்டும் 6 லட்சம் குடும்பங்கள் பால் அட்டை சலுகை விலையில் பயன் பெற்று வருகின்றனர். மேலும் அனைத்து பொதுமக்களும் இத்தகைய சலுகையை பெற ஜனவரி மாதம் முதல் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஆவின் அதிநவீன பாலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது. ஆவின் பால் அட்டை பெற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கும் பட்சத்தில் பால் அட்டை வழங்கப்படும். மேலும் இணையதளம் வாயிலாகவும், விண்ணப்பித்து புதிய பால் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். . www.aavin.tn.gov.in & www.aavinmilk.com. இந்த சலுகை பொது மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். எந்தவொரு தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |