Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்…. எதற்கெல்லாம் அனுமதி?…. எதற்கெல்லாம் தடை?….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால் தற்போது புதிய வகை ஒமைக்ரான் அதிவேகமாக பரவி வருவதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 10-ம் தேதி வரை 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த தடை.

உணவகம், விடுதிகளில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதி.

திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஜிம்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% நபர்களுடன் செயல்பட அனுமதி.

மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி.

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்.

திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி

அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளது.

Categories

Tech |