தேன் எடுக்க மலைப்பகுதிக்கு சென்றவரை கரடி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள ஏத்தக்கோவில் மேற்கு மலை தெருவில் தர்மர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மலைபகுதிக்கு சென்று தேன் எடுத்தல், கிழங்கு எடுத்தல் போன்ற தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தர்மர் எத்தக்கோவில் மலைப்பகுதியில் தேன் சேகரித்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென தர்மரை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பித்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த தர்மரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்