‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”.
மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை சிம்பு குறைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் இளம் தெலுங்கு நடிகை சித்தி இத்நானி நடிக்க இருப்பதாக போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Final schedule begins 3rd January 2022 with @SiddhiIdnani as Muthu’s Paavai! pic.twitter.com/61YUTHWfXb
— Gauthamvasudevmenon (@menongautham) December 31, 2021