Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ் வாடிக்கையாளர்களே…. இன்று முதல் புதிய மாற்றங்கள் அமல்…. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகளை ஒவ்வொரு துறையும் அறிவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கிகளில் பல்வேறு விதிமுறைகளை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்திய தபால் துறை சார்பில் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் நாளை முதல் சில பணம் சார்ந்த விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் பணம் எடுப்பதற்கும், போடுவதற்கும் கட்டணங்கள் வசூலிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த வங்கியில் 3 வகையான சேமிப்பு கணக்குகள் இருக்கிறது. இதில் அடிப்படை சேமிப்பு கணக்கில் இருந்து ஒவ்வொரு மாதமும் 4 முறை இலவசமாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்கு பின் பணம் எடுப்பதற்கு குறைந்தபட்ச கட்டண தொகையாக 25 ரூ வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்பின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் ஒரு மாதத்துக்கு 10000 ரூ டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த உச்ச வரம்பை மீறுகையில் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டண தொகை வசூலிக்கப்படும்.

மேலும் சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்பு கணக்கிலிருந்து 25000 ரூ தொகையை எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் இவ்வரம்பை மீறும்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச வரம்புக்கு பின் ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் 25 ரூ வசூலிக்கப்படுகிறது. ஆனால் அடிப்படை சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. ஆகவே இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த விதிமுறைகளை தெரிந்து இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த அனைத்து மாற்றங்களும் இன்று முதல் இந்த வங்கியில் அமலாக உள்ளது.

Categories

Tech |