தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகப்பட்டினத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.