Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. 15ஆம் தேதி வரை அமல்…. காவல்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 700 க்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பை போலீசார் இன்று வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளில் கூறியது, கடற்கரைகள், திறந்தவெளி மைதானங்கள், கடல் முகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வரை மக்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைப்போலவே பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் பரவலின் காரணமாக மும்பையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மும்பையில் நேற்று கொரோனா பாதிப்பு 3671 மற்றும் ஒமைக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக பதிவாகியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |