Categories
மாநில செய்திகள்

கடும் போக்குவரத்து நெரிசல்….. 4 கிலோமீட்டர் தூரம்…. ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்த வங்கி மேலாளார்….!!!!

சென்னையில் நேற்று பல கிலோ மீட்டர் தூரம் வரை நீடித்த கடுமையான போக்குவரத்து நெரிசல்களிடையே மூன்று ஆம்புலன்ஸ்களுக்கு நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று வழி ஏற்படுத்திக் கொடுத்த தனியார் வங்கி மேலாளருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  நேற்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வாகனங்கள் வரிசை கட்டி நின்றது. பணி முடித்துவிட்டு வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தனியார் வங்கியின் மேலாளர் ஜின்னா, சென்னை சாலையில் சென்றபோது மற்ற மாகாணங்களில் நடுவே சிக்கிக்கொண்டார். அப்போது அங்கு ஆம்புலன்ஸ்களும் மாற்றி கொண்டிருந்ததைப் பார்த்தார்.

உடனடியாக தனது இரு சக்கர வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ராஜாஜி மருத்துவமனை வரை கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வாகனங்களை விலக்கிவிட்டு ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுயநலம் பாராமல் ஜின்னாவை பாராட்டி அவர், உதவிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |